பாடசாலை ஆசிரியர்களின் வான்மையினை விருத்தி செய்வதற்கான விசேட திட்டம்

உலக வங்கியின் நிதியுதவியுடன் பாடசாலை ஆசிரியர்களின் வான்மையினை விருத்தி செய்வதற்கான விசேட திட்டம் கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் – ஐயங்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் இன்று(06) நடைபெற்றது.

பாடசாலை மட்ட ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தி எனும் கருப்பொருளில் பாடசாலை அதிபர் எம்.ஜி.ஏ. நாஸர் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் ரீஎம்எஸ். அகமட், ஆசிரியர் வள நிலையத்தின் முகாமையாளர் ஏ. றியாஸ் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்பிஎம். சித்தீக் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் குழச் செயற்பாடுகளும் நடைபெற்றன. பாடசாலை ஆசிரியர்களை முழுமையான செயற்பாடு கொண்டவர்களாக மாற்றவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். றமீஸ் தெரிவித்தார்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *