இரத்தப்புற்று நோய் காரணமாக வடமராட்சியைச் சேர்ந்த மாணவி உயிரிழப்பு

இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி நேற்று மாலை 5:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சுகந்தன் பூமிகா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கரணவாயில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *