ஹட்டன் சிங்கமலை குளத்தில் 6 நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்றபோது தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சைப் பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
தமிழ்மாரன் உள்ளிட 06 பேர் நேற்று(08) மாலை 5.00 மணியளவில் குறித்த ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளபோதே குறித்த இளைஞனே தவறிவிழுந்துள்ளார்.
கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடும் பணியினை மேற்கொண்டபோதும் தேடமுடியாத நிலையில் இன்று காலை தேடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதுடன் ஹட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தக்கியிருந்து கல்விகற்று வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


