இரவுநேர களியாட்ட விடுதிகளுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவன் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 07ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பிலியந்தலை, மடபாத, தம்பே சந்திக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கை செய்யப்பட்டுள்ளான்.
குறித்த இளைஞனிடமிருந்து 50 கிராம் கொக்கேயின், 20 கிராம் குஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

