சூழல் உணர்வுமிக்க சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை நிர்மாணித்தல் என்ற தொனிப்பொருளில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நாடு பூராகவும் இன்று(09) பாடசாலைகளில் கிளீன் சிறீலங்கா செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந் நிலையில் தர்மபுரம் மத்திய கல்லூரியிலும் குறித்த கிளீன் சிறீலங்கா செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மாணவர்கள், பெற்றோர்கள், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


