காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதத்தில் நேற்று(11) கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் கறுப்பையா ஐங்கரன் என்ற நாற்பது வயதுடைய தொண்டமாநகர் பகுதியைச்சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் வீழ்ந்த நிலையில் புகையிரதத்துடன் மோதியே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


