வட மாகாண ஆளுநர், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ க்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று(14) இடம்பெற்றது.

 

இலங்கையிலிருந்து அடுத்த மாதத்துடன் தனது பணியை நிறைவு செய்து திரும்பவுள்ளதாக கனேடியத் தூதுவர் ஆளுநரிடம் தெரிவித்தார்.

 

இதுவரை அவர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் மற்றும் கனேடிய அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார்.

 

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகளவில் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், போர் காரணமாக ஆவணங்கள் அழிவடைந்தமை இதற்கு பிரதான காரணமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலன் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *