சிறைச்சாலை உத்தியோகத்தரின் வீட்டுக்கு தீ வைப்பு; கும்பல் தப்பியோட்டம்

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தரின் வீட்டுக்கு வன்முறைக் கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

 

யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்று(15) அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பல் ஒன்று, வீட்டார் உறக்கத்தில் இருந்த வேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

வீடு தீப்பற்றி எரிந்ததை அடுத்து, வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து தீயினை அணைத்துள்ளனர். அதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *