ஐக்கிய நாடுகள்  நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலானது மாட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மேற்பார்வையில் புதிய மாவட்ட செயலத்தில் இன்று(17) இடம்பெற்றது.

 

மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் நிலை பேறான அபிவிருத்தி, சமூக நல்லிணக்கம் சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலை பெறான மீள்குடியேற்றம் போன்ற  பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இச் செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக  சுயாதீன மதிப்பிட்டுக் குழுவினரினால்  செயற்திட்ட மீளாய்வு மற்றும் கணிப்பீடு அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *