சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் விஷேட ஒன்றுகூடல் போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம். ஜஃபர் தலைமையில் சாய்ந்தமருது தனியார் விடுதியில் நேற்று(17)மாலை இடம்பெற்றது.
இப்போரத்தின் சமூகநலச் செயற்பாடுகளில் ஒன்றான கெளரவிப்பு நிகழ்வு மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்த விஷேட ஒன்றுகூடல் நடைபெற்றது.
இவ் ஒன்றுகூலின் போது, சம காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான யூ.எல். மப்றூக், நூறுல் ஹுதா உமர் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து போரத்தின் சார்பாக தனது கண்டனத்தை போரத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார்.
போரத்தினால் எதிர்காலத்தில் முன்னொடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய அங்கத்தவர்களையும் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


