மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார குழுக்கூட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார குழுக் கூட்டம் சுகாதாரக் குழுத் தலைவர் டொக்டர். இலியாஸ் கருணாகரன் தலைமையில், சுகாதாரக் குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டமானது மக்களுக்கான சுகாதார சேவைகளை மாநகரசபை எல்லைக்குள் திறம்பட வழங்கும் நோக்கில், பொதுமக்களிடம் இருந்து உறுப்பினர்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் சிறப்பான சேவைகளை துரிதமாக வழங்கும் நோக்கில் சேவைகளை சரியாக நடைமுறைப்படுத்த தடையாக இருக்கும் குறைபாடுகளை இனங்காண ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சுகாதார பரிசோதகர்கள், கால்நடை வைத்தியர், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *