போதைப்பொருள் பாவனை தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கை

புற்றுநோயை ஏற்படுத்தும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிமனையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் விழிப்பு நாளாக ஜூலை 27 ம் திகதி உலகளவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையொட்டி புகைத்தல், மதுபானம், மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றின் விளைவுகள் குறித்து விளக்கும் சித்திரங்கள் இன்று(18) கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதோடு சுகாதாரபணிமனை உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு விளக்க உரைகளையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *