கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ்க் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வீடு தேவையுடைய குடும்பத்துக்கு தனது மனிதாபிமான உதவித் திட்டத்தின் ஓர் அங்கமாக வீட்டினைக் கட்டி குறித்த குடும்பத்தின் பாவனைக்காக இன்று(21) அவர்களிடம் வழங்கப்பட்டது.
கிழிந்த தகரத்தினால் அடைக்கப்பட்ட குடிசையின் கீழ் மழை மற்றும் வெயில்க் காலங்களில் வசிக்க முடியாத ஆனாலும் காலங்காலமாக வசித்து வரும் வீட்டுத் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலன் நிர்மலன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரினால் கடந்த மாதம் வீட்டுக்கான கல் வைத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த வீட்டினை தனது குடும்ப உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் பூர்த்தி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ் வீடு கையளிக்கும் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். கங்காதரன், பிரதேச சபை உறுப்பினர் த. நிர்மலன் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கான வீட்டினை கட்டி வீடு அற்ற குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது


