செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 07 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

 

இந்த பகுதியிலிருந்து 65 என்புக்கூட்டுத்தொகுதிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

 

இந்தநிலையில், மனிதப்புதைக்குழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதிலிருந்து நேற்றுவரை 72 என்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இந்தநிலையில், மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *