திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம்

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று(26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்காவின் உள்ளக நீதிப்பொறிமுறை என்பது என்றைக்கும் நியாமான தீர்வினை வழங்கப்போவதில்லை என்பதால் தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடான நீதியைக் கோரி இந்த போராட்டத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள் பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *