செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழிக்கு அண்மித்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(26) நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

