தர்மபுரத்தில் இருவேறு குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி நேற்று(26) கல்லாறு பகுதியில் இருந்து மணல் ஏற்றிப் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மணல் அகல்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அன்றைய தினம் பெறுமதி மிக்க தேக்கு மரக் குற்றிகளை சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்து கொண்டு செல்லப்பட்ட கப்ரக வாகனத்தை தர்மபுரம் பொலிஸாஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியையும் பொலிஸாயர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மரக் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திஸ்சாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *