கிண்ணியா நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுடனான சந்திப்பானது கிண்ணியா நகரசபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தியின் கோரிக்கைக்கு அமைய கிண்ணியா வலய கல்விப்பணிப்பாளர் இசட். எம். எம். முனவ்வரா நளீம் தலைமையில் இன்று(27) வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த ஒன்றுகூடலில் பாடசாலைகளின் கழிவு முகாமைத்துவம், சேதன உர உற்பத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் சுயகற்றலை மேம்படுத்துவதன் ஊடாக ஆன்மிக ஒழுக்கம் உள்ள ஆரோக்கியமான கல்விச் சமூகத்தை உருவாக்குவது குறித்தும் நகரசபைக்கும் கல்விச் சமூகத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர், நகரசபை தவிசாளர், பிரதி கல்விப் பணிப்பாளர், நகரசபை பிரதி தவிசாளர், அதிபர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

