ஹட்டனில் ஆற்றில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

வாசனைத் திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி தடம் புரண்டு உள்ளது.

குறித்த விபத்து கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அதில் பயணித்த 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *