களுவாஞ்சிக்குடி வடக்கு சுப்ரமணியம் குருக்கள் குறுக்கு வீதியை கொக்கிறீட் வீதியாக மாற்றும் பணி
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி வடக்கு சுப்பிரமணியம் குருக்கள் குறுக்கு வீதி சுமார் 04 மில்லியன் ரூபாய் செலவில் 130மீற்றர் நீளம் கொண்ட கொங்கிறீட் வீதி அமைக்கும் பணி இன்று(28) காலை 9:30 மணி அளவில் தவிசாளர் மே. வினோராஜ், பிரதி தவிசாளர் வசீகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபெற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீண்ட காலமாக புணரமைக்கப்படாமல் இருந்த இவ் வீதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இன்று இவ்வீதி ஆரம்பிக்கும் பணிமுன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி கிராமத்தின் தலைவர் கந்தவேள் உட்பட கிராமத்தின் முக்கியஸ்தர்கள், மதகுருமார், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், சனசமூக நிலையத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

