“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று(28) மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச வளாகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் “மட்டு முயற்சியான்மை” எனும் கண்காட்சியும் விற்பனையும் இன்று காலை செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இக்கண்காட்சியில்
ஏராளமான பொதுமக்கள் விற்பனைக் கண்காட்சியைப் பார்வையிட வந்ததுடன் பொருட்களையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்தனர்.

இப் பிரதேச சிறு தொழில் முயற்ச்சியாளர்களை வலுப்படுத்துவதற்கு பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னேடுத்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்களான திருமதி சுபா சதாகரன், திருமதி லக்சன்யா பிரசந்தன், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *