பேத்தாழை கருங்காலிச்சோலை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலய திருச்சடங்கு

வாழைச்சேனை பேத்தாழை கருங்காலிச்சோலை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு 08ஆம் மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் மாலை 4மணியளவில் அருகிலுள்ள கடலில் அம்பாளுக்கு நீர் எடுத்தல் வைபவத்துடன் திருக்கதவு திறக்கப்படவுள்ளது.

பெரியசடங்கு(பெரியதிருவிழா) அடுத்த நாள்(08) வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் அம்பாளுக்கு நெல்லுக்குற்றுப் பூஜை மற்றும் கன்னிமார் சடங்கு என்பன இடம்பெற்று அன்றிரவு விநாயகர் பானை எழுந்தருளப்பண்ணல் இடம்பெறவுள்ளது.

சனிக்கிழமை(09) காலை திருக்குளுர்த்தி வைபவத்துடனும் தீர்த்தோற்சவத்துடன் சடங்குகள் நிறைவு பெறும்.

இச் திருச்சடங்கு காலத்தில் அடியவர்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து கடலோர அன்னையவள் கடலாட்சி அம்மன் திருவருள் பெற்று மண்ணிலே நல்ல வண்ணம் வாழ அனைவரையும் ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *