செங்கலடியில் டியாரோ நிதி நிறுவனத்தின் 24வது கிளை திறந்து வைப்பு

டியாரோ நிதி நிறுவனத்தின் 24வது கிளை மட்டக்களப்பு செங்கலடியில் இன்று(31) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

டியாரோ நிதி நிறுவனத்தின் செங்கலடி கிளை முகாமையாளர் விஜயகுமார் மேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசன்ன றணசிங்க, பணிப்பாளர்களான நிரஞ்சன் வர்ணகுலசூரிய, பிரபாஸ் குணரட்ன, உப்புல், தரிந்து தனஞ்ஜன், வடக்கு கிழக்கு பிராந்திய முகாமையாளர் அஞ்சலோ மற்றும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஜயலத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டியாரோ நிதி நிறுவனத்தில் நிலையான வைப்பிடப்படும் பணத்திற்கு அதிகூடிய வட்டி வழங்கடவுள்ளதாகவும் தெரிவிக்கப்ப்டது. மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் சுயதொழில் முயற்சிகள் மற்றும் வியாபார கடன்கள், லீசிங் வசதிகள் விரைவாக வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *