கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முரசுமோட்டை 2கட்டை பகுதியில் வைக்கோல் கட்டும் இயந்திர அறிமுக விழா இன்று(31) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கமக்கார அமைப்பினர் மற்றும் தொழிலதிபர்கள், வங்கி ஊழியர்கள், கிழக்கு மாகாண விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் சிவஞானம் சிறீதரன் தலைமை தாங்கி ஊற்றுப்புல விநாயகர் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
விவசாயிகளிற்கான எளிய முறையில் விவசாயிகளுக்கு வைக்கோல் கட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தியதோடு குறித்த இயந்திரம் மூலம் எவ்வாறு இலகுவாக வேலை செய்வது என்பதனையும் செயன்முறை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தனர்.
குறித்த நிகழ்வின் அடுத்த கட்டமாக கிளிநொச்சியில் நவீன இயந்திரம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதில் கமக்கார அமைப்பினர், விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

