வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 08ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3மணியளவில் மிகவும் சிறப்பான முறையில் இந்த வருடத்திற்கான வரலட்சுமி விரத பூஜை வழிபாடுகள் மற்றும் திருவிளக்கு பூஜை வழிபாடுகள் என்பன நடைபெறவுள்ளது.
எனவே வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்கள் அனைவரும் தங்கள் பெயர் விபரங்களை முன்கூட்டியே ஆலயத்தில் பதிவு செய்து ஒருவருக்கான கட்டணமாக ரூ.250 பணத்தினை முன்கூட்டியே செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.


