கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான வடக்கு தெங்கு முக்கோண வலயம் தொடர்பாகவும் தெங்கு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்தன தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கதிபர்கள், தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர், அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், தென்னை பயிர்ச்செய்கை சபை உத்தியோகத்தர்கள், தெங்கு செய்கையாளர்கள் மற்றும் தெங்கு உற்பத்தி சார்ந்த தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


