அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா கிருபாகரன் என்ற குடும்பஸ்தரே இன்று(03) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் தொழிலாளியாக இருந்ததுடன் நேற்று முதல் காணாமல் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையின் போது குறிப்பிட்டார்.
இதே வேளை இலவச ஜனாசா சேவைகளை மேற்கொள்ளும் சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தங்களது ஒத்துழைப்பினை உரிய தரப்பினருக்கு வழங்கி வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பான விரிவான விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


