ஈச்சிலம்பற்றில் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில் வைத்து ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி இன்று(03) காலை உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் விறகு எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றபோது யானைத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

வெருகல் – சேனையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 69 வயது கதிர்காமத்தம்பி கனகராசா என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *