வாழைச்சேனையில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான செயலமர்வு

இவ் வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி முன்னோடி மாதிரி பரீட்சை வழிகாட்டி வினாத்தாள் செயலமர்வு இன்று(04) வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

வாழைச்சேனை நகர  அரிமா கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ச. கார்த்தீபன் தலைமையில் இச் செயலமர்வு நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் 315 மாணவர்கள் பங்குபற்றி பயன் பெற்றிருந்தனர்.

இவ்வாறான  பயிற்சி நெறி  மூலம் மாணவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பரீட்சை தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதுடன் மன உறுதியும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட அரிமா கழகத்தின் மாவட்டம் 306 டி 10 இற்குரிய ஆழுநர் லயன் க.லோகேந்திரன் மாணவர் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் வலய நிர்வாகி லயன் ஆசிக், ஆசிரிய ஆலோசகர் திருமதி. சவுந்தரவள்ளி அருளேந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான நிதி அனுசரனையை சமூக சேவையாளர் க. யுவராஜன் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *