கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ் சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசத்திற்கு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைகிறது கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் இனவழிப்பு இலட்சிய பற்றுதியுடன் பயணித்த எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
விடுதலைப்புலிகக்கு சம  அங்கீகாரம் கொடுத்திருப்பது என்பது  மன்னிக்க முடியாத ஒன்று விடுதலைப்புலிகளின் தலைவரின் இடத்தில் கூட்டங்களை நடாத்துகிறார்கள் அதனையும் மாற்றியமைக்க வேண்டும்.
தூதுவர்கள் எங்களை சந்திக்கும் போது மக்கள் எங்களுக்கு பாடம் கற்பிக்க தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளதாக குறிப்பிடுகின்றோம்  இந்த முடிவை  இரண்டாவது தேர்தலின் முடிவிலும் மக்கள் எடுப்பார்களாக இருந்தால் தாங்களும் வேறு முடிவை கருத்தில் எடுக்க வேண்டி வரும் என தூதுவர்கள் தெரிவிக்கின்றனர்.
24சதவீத வாக்குகளையே தேசிய மக்கள் சக்தி  யாழ் மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.
வெளிநாடுகளை பொறுத்தவரையில் இந்த தேர்தல்  அனைத்து கேள்விகளுக்கும் முடிவு கொடுக்கின்ற தேர்தலாக பார்க்கின்றார்.
பாராளுமன்றத்தில் 19 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும்  10உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை.
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அந்த முயற்சி சாத்தியப்படவில்லை சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது அதற்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார் அதன் பின்பு சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின் அந்த விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
தற்போது தமிழரசுக்கட்சியில் ஆட்சி செய்பவர்கள் தமிழ்தேசியத்தை நீக்க அரசியலை கொண்டு செல்பவர்கள் சுகந்திரதினம் கொண்டாட எத்தனிப்பவர்களும் சிங்கள கட்சிகளுக்கு இங்கு வைத்து ஆதரவு வழங்குபவர்களும் தான் உள்ளனர்.”நேரத்திற்கு நேரம் முடிவெடுப்பவர் நாங்கள் இல்லை”
மீண்டும் நிராகரிக்கப்பட்ட ஒருவர் வந்தவுடன் யாழ்ப்பாணத்தை தோற்கடித்த நபரே அந்த கட்சியை ஆக்கிரமித்துள்ளார்.அழிந்து போகும் நிலைக்கு தமிழரசுக்கட்சி உள்ளது.
இந்தியப்பிரதமரை சந்திக்கும் போது  சமஷ்டியை நாங்கள் வலியுறுத்தினோம் மற்றவர்கள்  ஒற்றையாட்சி 13ஐ  தான் வலியுறுத்தினார்கள் மக்களிடம்  வாக்கு கேட்க வரும் போது சமஷ்டியை சொல்கிறார்கள்.
தமிழர் அரசியல் பாரம்பரியத்தை மதிக்கின்றேன். “எமது கட்சி பாரம்பரிய கட்சி என்ற சிந்தனை எனக்கு இல்லை ,தமிழரசுக்கட்சி தவிர்க்க முடியாத கட்சி  அழிக்கும் தேவை கிடையாது எனக்கு” என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *