அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று(11) ஆரம்பமிகவிருந்த நாடளாவிய வேலை நிறுத்தத்தை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

 

மருத்துவர்களின் இடமாற்றங்கள் உட்பட பல கோரிக்கைகள் செயற்படுத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இன்று (11) காலை 8.00 மணிக்கு முன்னர் தங்கள் கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

 

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு சுகாதார அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின்போது கிடைத்த ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு, நாடளாவிய வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *