வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 2ம் மொழி கழக செயற்பாடுகளில் இணைவு

கல்குடா கல்வி வலயத்தில் மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில், நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினூடாக பாடசாலை மட்ட இரண்டாம் மொழிக் கழக செயற்பாடுகளானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.சந்திரகுமார் எற்பாட்டில் பாடசாலை கேட்போர் கூட மண்டபத்தில் (05) திகதி இடம் பெற்றது.

மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் அரச கரும மொழிக் கொள்கையை மேம்படுத்துவதில் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதனைத் தொடர்ந்து  இரண்டாம் கட்ட மொழிக் கழகங்களின் செயற்பாடுகளில் க.பொ.த.சாதாரண மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை பாடசாலையின் கேட்போர் கூட மண்டபத்தில் (05) இடம் பெற்றது

இவ் கருத்தரங்கு நிகழ்வில் குறித்த பாடசாலையில் இருந்து 30 மாணவர்கள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டு மொழியாற்றலை மேம்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கழகத்தின் செயற்பாடுகளானது 48 மணித்தியாலங்களாக கொண்டுள்ளதுடன் இச் செயற்பாடுகளை தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட வளவாளர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *