ஆரோக்கியமான வயோதிபத்தில் இளைஞர்களின் பங்கு தொடர்பான பயிற்சிப்பட்டறை

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளானது உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் முதியோர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி துஷ்யந்தி சத்திரபிரகாஷ் எற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (07) ஆம் திகதி இடம் பெற்றது.

முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது பாதுகாப்பான முதிர்வயது திட்டமிடப்பட்டுள்ள எதிர்காலம், முதிர்வயதை நோக்கி இளைஞர்களாக எமது கடமைகளும் பொறுப்புக்களும், உடற்தொழிற்பாடு, உள ஆரோக்கியம், ஆரோக்கியமான உணவு முறை, மன அழுத்த முகாமைத்தும், ஆன்மீகம், சமூகத்தோடு இணைந்திருத்தல் போன்ற பல விடயங்கள் இதன் போது தெளிவூட்டப்பட்டன.

இந் நிகழ்வின் வளவாளர்களாக மட்டக்களப்பு  பிராத்திய சுகாதார பணிமனையின் தொற்றாநோய்ப் பிரிவின் மருத்துவர் எம்.ருதேசன், ஒய்வு நிலை விரிவுரையாளர் எஸ். லோகோஸ்வரன் மற்றும் ஒய்வு நிலை உளவள துணையாளர் எஸ். ஸ்ரீதரன் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சந்திரகலா கோணேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *