தேசிய மக்கள் சக்தியின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாடசாலை வீதி கொங்ரீட் வீதியாக செப்பனிடுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றைய நாளில் முதல்கட்ட வேலைகள் தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச இணைப்பாளர் நிரோஜன் சதாசிவமால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோர பிராந்திய பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் ஆதப்பாவா அபூபக்கரின் முன்மொழிவுக்கு அமைவாக இவ் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இவ் வேலைத்திட்டங்கள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


