திருகோணமலை, அக்போபுரம், சீனிபுர கிராமத்துக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்து அட்டகாசம் செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை(15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த காட்டு யானையானது இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகள் வலிமையற்றுக் காணப்படுவதால், காட்டு யானைகள் அதனை உடைத்துக்கொண்டு கிராமத்துக்குள் அடிக்கடி நுழைவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றதுடன் அவர்களின் அன்றாட செயற்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
அக்போபுரம் பொலிஸார் இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

