மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை வன்புணர்ந்த 17 வயது சிறுவன் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று(16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றில் சம்பவ தினமான இன்று அதிகாலை குறித்த சிறுமி அறையில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடிய நிலையில் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதைக் கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன் குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *