சம்மாந்துறையில் சோதனை நடவடிக்கை; 17 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்துளளனர்.

நேற்ற(16) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதியில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது, 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வயதுடைய ஒருவரும், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுயிருந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சில மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர. கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *