ஹட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான தூய்மையான குடிநீர் வழங்கல் திட்டம்

ஹட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான தூய்மையான குடிநீர் வழங்கல் திட்டம் 2025 அக்டோபர் 15 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு, மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இத்திட்டம் சின்னத்தம்பி குடும்ப அறக்கட்டளை அமைப்பின் பூரண நிதிப் பங்களிப்போடு, அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் ஆகியோரின் சிறப்பான ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக ஐஎம்எச்ஓ அமைப்பின் திட்ட பணிப்பாளர் திரு. கந்தையா விக்னேஸ்வரன், ஐஎம்எச்ஓ அமைப்பின் பெருந்தோட்டக் கல்விகான இணைப்பாளர், ஐஎம்எச்ஓ அமைப்பின் நீர் மற்றும் சுகாதாரத் திட்ட பொறுப்பதிகாரி மற்றும் கல்வித் திட்ட பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் 130 அடி கொண்ட ஆழ்துளைக் கிணறு உட்பட 2 கை கழுவும் அமைப்புகளோடு, பாடசாலை முழுவதும் நீர்க் குழாய் இணைப்புகள் மற்றும் 5000 லீற்றர் கொள்ளவு கொண்ட நீர்த் தாங்கி கொண்டு அமைக்கப்பட்டு முழுமைப்படுத்தபப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *