கொட்டகலையில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

உள்ளூராட்சி வாரத்தையும் நூலக, கலை, இலக்கிய மேம்பாட்டு தினத்தையும் முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபையின் நூலகப்பிரிவினால் ‘அழகிய நாடு வளமான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரக் கண்காட்சியில் தமது கலைப்படைப்புகளை முன்வைத்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் வைபவம் நேற்று(16) கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் நிகழ்வில் சித்திரக் கண்காட்சியில் படைப்புகளை முன் வைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கேம்பிரிஜ் கல்லூரி, வட்டகொடை தமிழ் வித்தியாலயம் மற்றும் வட்டகொடை சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *