வடமாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் ஏற்பாடு செய்த உலக குழந்தைகள் தினம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றது.
நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சறோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் ஊவாமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் எதிரி சூரிய, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் இல்லங்களின் பொறுப்பதிகாரிகள், சிறுவர் இல்லங்களின் சிறார்கள் மற்றும் வடமாகாண சிறார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


