பொலிஸாரின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வு

இன்று(20) தீபாவளி தினத்தினை ஒட்டி நாடுபூராகவுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

 

அந்த வகையில் இன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் பொலிஸ் நிலையப் பிரதம பொலிஸ் அதிகாரி திரு. பிரீஸ் தலைமையில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வு இடம்பெற்றது.

 

இப்பூசை நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல கலந்து சிறப்பித்தார்.

 

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வும் மற்றும் வரவேற்பு நடனமும் இடம்பெற்றதுடன் பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

 

அதனைத்தொடர்ந்து ஆலய பிரதம குரு அங்குஸ்ஷநாதர் குருக்களினால் பூசை நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.

 

மேலும் குறித்த நிகழ்வில் அம்பாறை தரம் 01 உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கான உதவி அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *