சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளராக பாமி மன்சூர் நியமனம்

சமகால மற்றும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மருதமுனை பிரதேச ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் சரோ தாஜுதீன் தலைமையில் நேற்று(20) மாலை மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

இந் நிகழ்வில் பல பிரதேசங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  இளைஞர் அமைப்பாளர்கள் கட்சியினால் நியமிக்கப்பட்டனர். அதன் பிரகாரம் சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளராக முஹம்மட் மன்சூர் முஹம்மட் பாமி நியமிக்கப்பட்டார்.

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி அல்ஹாஜ் றஊப் ஹக்கீம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்ப, கட்சியின் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் கட்சியின் உதவிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும் முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் மற்றும் கட்சி உயர்பீட உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *