வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சுதர்சன் நியமனம்

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இன்று(22) வழங்கி வைத்தார்.

 

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்து கொண்டார்.

 

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக சாம்பசிவம் சுதர்சன் இதுவரை பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *