களுவாஞ்சிக்குடியில் கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண காரியாலயம் திறப்பு

ஜேர்மனியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கிரிவலம் அறக்கட்டளை கிழக்கு மாகாணத்திற்கான காரியாலயம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள கட்டிடத்தில் அண்மையில் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண செயலாளர் லிவாஸ் தலைமையில் சம்பிரதாயப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அறக்கட்டளையின் கிழக்கு மாகாண செயலாளர் லிவாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ், பட்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் சபேஷ் குமார்,  சட்டத்தரணி கிருபாகரனன், கிராம உத்தியோகத்தர் அனோஜன், முல்லைத்தீவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உப தலைவர் சீலன், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில பண்டார, அறக்கட்டளையின் பொருளாளர் பாரதி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு காரியாலயத்தை சம்பிரதாயப்பூர்வமாக  நாடாவெட்டித் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து முதியோருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்து உலர் உணவுப்  பொதிகளை வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *