எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய மாணவர்கள் சாய்ந்தமருது பொது நூலகத்தை பார்வையிட்டனர்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்கள் நேற்று(23) சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு விஜயம் செய்து, நூலக செயற்பாடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன் நூலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்கள் தங்களது திறமைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தினர். இதற்காக இம்மாணவர்கள் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *