போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடும் ஒன்றாக” எனும் தொனிப்பொருளிலான தேசிய செயற்பாட்டின் ஓர் அங்கமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக, பிரதேச செயலக மட்ட நிகழ்வு, இன்று(30) போரதீவுப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ரங்கநாதனின் வழிகாட்டலில், உதவிப் பிரதேச செயலாளர் துலாஞ்சனனின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய நிகழ்வு திரையில் ஒளிபரப்பப்பட்டதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கொடிய நச்சுப் போதைப்பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, ஊக்குவிப்பு மற்றும் அவற்றிற்கு உடந்தையாக இருத்தலை முற்றுமுழுதாக எதிர்ப்போம் என்று சத்தியப்பிரமாண உறுதியுரை செய்து கொண்டனர்.
அத்துடன் உதவிப் பிரதேச செயலாளர் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விசேட உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கணக்காளர் அம்பிகாபதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பிரியமால், நிர்வாக உத்தியோகத்தர், உமாபதி, நிருவாக கிராம உத்தியோகத்தர், கிளைத் தலைவர்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

