மட்டக்களப்பு வாழைச்சேனை மீராவோடை தமிழ் மகா வித்தியாலத்துக்கு முன்பு நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை; ‘முழு நாடுமே ஒன்றாய்’ போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்பாட்டுத்திட்டத்தின் கீழ் நேற்று(30) முற்றுகையிட்ட பொலிஸார் 100 லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின்; வழிகாட்டலில் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான பொலிஸார் சம்பவ தினமான நேற்று குறித்த கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரி ஒருவரைக் கைது செய்ததுடன் அங்கிருந்து 100 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

