காத்தான்குடி பிளிஸ்ட் சமூக இளைஞர் அமைப்பு மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்கம் இணைந்து தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த குளிர்பானம் வழங்கும் நிகழ்வு இன்று(01) காத்தான்குடி குட்வின் சந்தியில் இடம்பெற்றது.
தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையில் வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தாகம் தீர்க்கும் நோக்கிலும் தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையிலும் குளிர்பானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் அதிகமான பயணிகள் மற்றும் பொதுமக்களது தாகம் தீர்க்கப்பட்டதுடன் மனிதநேயமிக்க இச் செயற்பாடுகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.


