மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம் நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (01) திகதி இடம் பெற்றது.
நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு, தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.சந்திரகுமார் ஒழுங்கமைப்பின் கீழ் இரண்டாம் மொழி பயிற்சி நெறிகள் இடம் பெற்றன.
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் செயற்திட்டத்திற்கு அமைவாக
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக மற்றும் அன்றாடகடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக் கற்கை நெறி அமையவுள்ளது.
18/2020 சுற்று நிருபத்திற்கு அமைவாக 150 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இக்கற்கை நெறியை அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரச கரும மொழிகள் வாரத்தினை அடிப்படையாகக்கொண்ட மூன்று மாதகால சான்றிதழ் கற்கை நெறியில் இளைஞர் யுவதிகள் பங்கு பற்றினர்.
இக்கற்கை நெறியினை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளராக திருமதி.திலினி மதுசிக்கா மற்றும் செல்வி சஹானா வளவாண்மை மேற்கொண்டு வருகின்றனர்.

