அம்பாறையில் மகாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொரபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகாஓயா, சமகிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

